மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1706 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1706 days ago
மலையாளத்தில் நடிகை பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள படம் வர்த்தமானம்.. இந்தப்படத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியாக பார்வதி நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குனரான சித்தார்த் சிவா என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற சவுகத் என்பவர் தான், இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்தை திரையிடுவதற்கான தணிக்கை சான்றிதழ் தர மறுத்துவிட்டனர்.. இந்தப்படத்தின் கதை நம் அரசுக்கு எதிரானதாகவும் மத உணர்வுகளை பாதிக்கும் விதமாகவும் இருப்பதாகவும் அதற்கு காரணம் கூறியிருந்தனர்.
இதை தொடர்ந்து இந்த படத்தை மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய வர்த்தமானம் படக்குழுவினர், தற்போது படத்தை வெளியிட தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனர்.. அதுமட்டுமல்ல தியேட்டர்களில் திரையிடவே தகுதி இல்லை என, கேரள சென்சார் போர்டு மறுத்த நிலையில், எந்த ஒரு காட்சியையும் வெட்ட சொல்லாமல், ஒரே ஒரு காட்சியில் வெறும் 5 வினாடிகள் வசனத்தை மட்டும் மியூட் செய்து, சான்றிதழ் அளித்துள்ளது ரிவைசிங் கமிட்டி...
இதுகுறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சித்தார்த் சிவா, “சுதந்திர போராட்ட வீரரான முகமது அப்துரஹ்மான் சாஹேப்' என்பவரை பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் படிக்கும் மலையாள மாணவியான பார்வதி ஆராய்ச்சி செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சுதந்திர போராட்ட வீரரை பற்றிய கதை எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானது ஆகும்..? கேரள சென்சார் போர்டில் மத துவேசத்துடன் செயல்படும் ஒரு அதிகாரியால் தான், ஒருதலை பட்சமாக எங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. சினிமாவுக்குள் மதத்தை கலக்காமல், அதை கலைப்படைப்பாக பார்க்கும் அதிகாரிகளை மட்டுமே தணிக்கை குழுவில் இடம்பெற செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார் இயக்குனர் சித்தார்த் சிவா.
1706 days ago
1706 days ago