மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1611 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1611 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1611 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1611 days ago
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆர்.ராதாகிருஷ்ணன் செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். இவர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்தும், தேர்தல் செல்லாது என்று அறிவிக்க கோரியும் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், பி.டி.செல்வகுமார், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைவிதி 13ன்படி, தேர்தலில் நிர்வாக பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான தேதிக்கு முன்பு, 5 ஆண்டுக்குள் தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு படம் தயாரிக்காத நிரந்தர உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாமே தவிர, நிர்வாகி பதவிகளுக்கு போட்டியிட முடியாது.
அதனால் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு 5 ஆண்டுகளுக்குள் நேரடியாக தமிழ் திரைப்படங்களை ஆர்.ராதாகிருஷ்ணன் , கதிரேசன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தயாரிக்கவில்லை இதனால், சங்க விதிகளை மீறி 3 பேரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இந்த 3 பேரும் பதவிகளை வகிக்க தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூவரும் பதவிவகிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு மறுதேர்தலை நடத்த இரு தரப்பினருக்கும் சம்மதமா?என்று கேள்வி எழுப்பியதோடு இதுகுறித்து இரு தரப்பும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மூவருக்கும் விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் விலக்கிக் கொண்டது.
1611 days ago
1611 days ago
1611 days ago
1611 days ago