இந்த சீரியல் நடிகைக்கு திருமணமா?
ADDED : 1573 days ago
விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தனிகா 'மாப்பிள்ளை', 'ராஜா ராணி' ஆகிய தொடர்களில் நடித்தார். வெள்ளித்திரையிலும் 'சீமராஜா' உள்ளிட்ட சில படங்களில் தோன்றியிருந்தார். தற்போது 'கோகுலத்தில் சீதை', 'நம்ம வீட்டு பொண்ணு' தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய வைஷாலி தனிகா இது தான் தனது கடைசி பேச்சிலர் பிறந்தநாள் என கூறி அவரது காதலர் சத்யதேவை தன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் அவரது திருமணம் விரைவில் நடக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இதன் காரணமாக வைஷாலியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.