உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வில்லி கதாபாத்திரத்தில் விஜே மகாலட்சுமி?

வில்லி கதாபாத்திரத்தில் விஜே மகாலட்சுமி?

விஜே மகாலட்சுமி பல தொடர்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், ஜீ தமிழ் டிவியில் தொடரில் வில்லி கதாபாத்திரத்தை கைப்பற்றியுள்ளார்.

ஜீ தமிழின் ஹிட் சீரியல்களில் ஒன்று திருமதி ஹிட்லர். இதில் நடிகை அம்பிகா, கீர்த்தனா மற்றும் அமித் பார்கவ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் மூத்த மருமகள் கதாபாத்திரத்தில் வில்லியாக தனது நடிப்பில் மிரட்டி வந்த நடிகை சவுமியாவை கடந்த சில எபிசோடுகளில் காண முடியவில்லை. இந்நிலையில் சவுமியா நடித்து வந்த அர்ச்சனா என்கிற கதாபாத்திரத்தில் விஜே மகாலட்சுமி நடித்து வருகிறார். சவுமியா தொடரை விட்டு விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் அர்ச்சனாவாக மகாலட்சுமி நடித்த எபிசோடுகளும் தற்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து மகாலட்சுமியின் ரசிகர்கள் ஜீ தமிழுக்கு படையெடுத்து வருகின்றனர்.

விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தொலைக்காட்சி தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !