உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை விழா நிறுத்தம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை விழா நிறுத்தம்

திருவாடானை; திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டது.

திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம்நடைபெறும். இந்த ஆண்டுஏப்.27ல் கொடியேற்ற மும், மே 5ல் தேரோட்டம் நடக்க இருந்தது.தற்போது 144 தடை உத்தரவால் திருவிழா நிறுத்தப்பட்டது.இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:அரசு தடை உத்தரவால் சித்திரை உற்ஸவத்திற்கான கொடியேற்றம் மற்றும்தேர்திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !