வள்ளலார் குரு பூஜை
ADDED :1483 days ago
மதுரை : மதுரை பூதிப்புரம் வள்ளலார் நிலையத்தில் திருவருட்பிரகாச வள்ளலார், குருபூஜை விழா சன்மார்க்க சீலர் வடலுார் முத்துச்சாமி நினைவாக நடந்தது.நிர்வாகி ஜோதி ராமநாதன் நடத்தினார். திருவடி புகழ்ச்சி அகவல் அகண்ட பாராயணம் நடந்தது. நடராஜன், பாலதிருச்சிற்றம்பலம், கவிதா, மோனிஷா, மணிகண்டன், திருஞானசம்பந்தம் ஆகியோர் பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை சிவஜோதி செய்திருந்தார். ஜோதி ஆராதனையும், அன்னதானமும் நடந்தது.