உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளைகாப்பு நாயகி

வளைகாப்பு நாயகி


பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு. புதிய உயிரைப் பூமிக்கு அழைத்து வரும் பத்துமாதத் தவத்தின் பரபரப்பு. கர்ப்பணிகள் அனைவரும் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் பெரும்பாலும் சிசேரியன் மூலமாக குழந்தைகள் பிறக்கின்றன. இந்த நிலையை மாற்ற நினைப்பவர்கள் வளைகாப்பு நாயகி என்னும் திருச்சி உறையூர் குங்குமவல்லியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். அம்மன் அருளால் சுகப்பிரசவம் நடக்கும். தாயும் சேயும் நலமுடன் வாழ்வார்கள்.
சோழ மன்னரின் மனைவி காந்திமதி சிவபக்தையாக இருந்தாள். தலைநகரான உறையூரிலிருந்து தினமும் நடந்து சென்று திருச்சி மலைக்கோட்டையில் அருள்புரியும் தாயுமானசுவாமியை தரிசிப்பாள். ஒருமுறை நிறைமாத கர்ப்பிணியான அவள், மலைக்கோட்டை நோக்கி புறப்பட்டாள். நடந்த களைப்பு தீர வழியில் உள்ள நந்தவனம் ஒன்றில் ஓய்வெடுத்தாள். அவள் மீது இரக்கப்பட்ட சிவபெருமான் பார்வதியுடன் தோன்றி சுகப்பிரசவம் அமைய வரம் கொடுத்தார். மகிழ்ச்சியடைந்த காந்திமதி அந்த இடத்திலேயே சோழ மன்னரின் ஆதரவுடன்  கோயிலைக் கட்டினாள். இங்குள்ள சுவாமி தான்தோன்றீஸ்வரர் எனப்படுகிறார். அம்மனின் திருநாமம் குங்குமவல்லியம்மன்.
 சுகப்பிரசவம் நடக்க வளையல் அலங்காரம் செய்து கர்ப்பிணிகள் அம்மனை வழிபடுகின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல மணவாழ்க்கை அமையவும், புதுமணத் தம்பதியர் குழந்தை வரம் பெறவும் இங்கு வளையல் காணிக்கை செலுத்துகின்றனர்.
தை மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று குங்குமவல்லியம்மனுக்கு வளைகாப்பு நடக்கிறது.  இதை மூன்று நாட்கள் தரிசிக்கலாம். தை மூன்றாம் ஞாயிறன்று பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கப்படும்.
எப்படி செல்வது:
* திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !