ராமன் வணங்கிய பெருமாள்!
ADDED :5181 days ago
ராவணனுடன் போரிடச் சென்ற ராமன் வானர சேனையுடன் சேதுக்கரையை அடைந்தார். கடலைக் கடந்து இலங்கை செல்ல வேண்டி கடலரசனை நோக்கி நாணல் புல்லின் மீது படுத்தபடி மூன்று நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அந்தஇடமே திருப்புல்லணை என்றானது. தற்போது திருப்புல்லாணி எனப்படுகிறது. ஆதிஜெகந்நாதப் பெருமாள் என்பது இவரது திருநாமம். இவருக்கு பெரிய பெருமாள் என்ற பெயர் உண்டு. சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். ஜெகந்நாதரை வழிபட்ட ராமன், வெற்றி பெற்று அயோத்தி திரும்பும் போது மீண்டும் இங்கு வந்தார். அப்போது பட்டம் கட்டிக்கொண்டு பட்டாபி ராமராக காட்சியளித்தார்.