தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவரை எங்கு வழிபடுவது?
ADDED :5181 days ago
பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே சிவன்கோயில் காவல் தெய்வமாவார். சில ஊர்களில் தனிக் கோயிலும் உண்டு. சீர்காழி தோணியப்பர் கோயிலில் அஷ்டபைரவராக 8 பைரவசந்நிதிகள் உண்டு. தேய்பிறை அஷ்டமி மட்டுமல்ல, ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.