உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலாண்டனூரில் 9ம் தேதி ஆரோக்கியமாதா கெபி திறப்பு!

கோவிலாண்டனூரில் 9ம் தேதி ஆரோக்கியமாதா கெபி திறப்பு!

சேர்ந்தமரம்: கோவிலாண்டனூர் புனித ஆரோக்கியமாதா கெபி திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.சேர்ந்தமரம் பங்கு கோவிலாண்டனூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான சவேரியார் ஆலயம் உள்ளது. கூரையால் வேயப்பட்ட இந்த ஆலயத்தை 1991ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. பங்கு மக்களின் ஒத்துழைப்போடு தற்போது மூன்று அடுக்குகளால் புதிய கெபி கட்டப்பட்டு வருகிறது. உச்சியில் ஏசுநாதர் செரூபமும், 3ம் அடுக்கில் மிக்கேல் காவல் அதிதூர், 2ம் அடுக்கில் சவேரியார், முதல் தளத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா சொரூபமும் இடம் பெற்ற கெபி அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வரும் 9ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை வகிக்கிறார். முன்னதாக ஆயருக்கு பங்கு மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. திறப்பு விழாவை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு விருந்தும், உபசரிப்பும் நடக்கிறது.ஏற்பாடுகுளை பங்குதந்தை அந்தோணி வியாகப்பன் அடிகள் மற்றும் ஊர் நாட்டாண்மை, நிர்வாகிகள், இறைமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !