/
கோயில்கள் செய்திகள் / திறந்தவெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே! அவை வழிபாட்டுக்குரியவை தானா?
திறந்தவெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே! அவை வழிபாட்டுக்குரியவை தானா?
ADDED :5176 days ago
எவ்வளவு அடி உயரத்தில் வேண்டுமானாலும் சிலை வைக்கட்டும். திறந்த வெளியில் இருப்பது தான் கேள்விக்கு இடமளிக்கிறது. திருச்சி உறையூர் வெக்காளியம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் திறந்த வெளியில் உள்ளனவே என்று கேட்கிறார்கள்! அவை பழமையானவை. திறந்தவெளியில் இருப்பதற்கு அந்தந்தக் கோயிலுக்கென்றே புராண வரலாறுகள் இருக்கின்றன. எனவே, அத்தலங்களை உதாரணமாகக் கொண்டு புதிதாகத் திறந்தவெளியில் சிலை அமைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இதற்கு மேல் இப்படிச் செய்பவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.