தலைவனாக என்ன தகுதி?
ADDED :5176 days ago
தலைவன் ஒழுக்கமுடையவனாக இருந்தால் தான் தொண்டன் ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். இப்போது, ஒழுக்கசீலர்களான தலைவர்களைப் பூதக்கண்ணாடி கொண்டு அலச வேண்டியிருக்கிறது. கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக, அவருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது. விஷத்தை அவருக்குக் கொடுத்தார்கள். அப்போது அவர் தன் சீடர்களான பைடோ, கிரீட்டோ ஆகியோரை அழைத்தார். நான் எக்ஸ்ளிப்யாஸி என்பவரிடம் ஒரு கோழி கடன் வாங்கினேன். அதைத் திருப்பி கொடுப்பதற்குள் என் நிலைமை இப்படியாகி விட்டது. நீங்கள் அவருக்கு அதை வாங்கிக் கொடுங்கள், என்று சொல்லிவிட்டு உயிரை விட்டார். நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளை கடைபிடித்ததால் தான், இன்று அவர் நம்மால் நினைக்கப்படுகிறார். நேர்மையான அரசியல் தலைவர்களை நம் தேசத்துக்கும் ஆண்டவன் தருவானா!