பஞ்ச சக்திகள் பதிஅமர்த்தும் விழா பெரிய காஞ்சியில் இன்று துவக்கம்
ADDED :897 days ago
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் நிமந்தகார தெருவில் சந்தவெளி அம்மன், பச்சையம்மன், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், அரசுகாத்தம்மன் ஆகிய பஞ்ச சக்திகளின், பதி அமர்த்தும் விழாவையொட்டி, கடந்த 25ல் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. முதல் நாள் உற்சவமான இன்று, சந்தவெளி அம்மன் நிமந்தகார தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாம் நாள் உற்சவமான, வரும் 17ல் பச்சையம்மனும், மூன்றாம் நாள் உற்சவமான, வரும் 28ல் கருக்கினில் அமர்ந்தவள் அம்மனும், ஆக., 6ல் திரவுபதி அம்மமனும், 13ல் அரசு காத்த அம்மனும் எழுந்தருள்கின்றனர். இதில், ஆக.,25ல் பஞ்ச சக்திகள் அனைவருக்கும் படையலிட்டு, பதி அமர்த்தும் விழா நடக்கிறது. ஆக., 27ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.