உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல காலம் பிறக்குது

நல்ல காலம் பிறக்குது


கோதை என்பது ஆண்டாளின் இயற்பெயர். பெரியாழ்வார் ஏன் இப்பெயர் சூட்டினார் தெரியுமா. அதற்கு முதலில் ஒரு ஸ்லோகத்தை படிப்போம்.

காம் ததாதி இதி கோதா
காம் தததே இதி கோதா

காம் என்றால் நல்ல வாக்கு. நல்வாக்கு தருபவள், நல்வாக்கு உடையவள் என்று பொருள். கஷ்டம் வரும்போது ஆறுதலாக யாராவது பேசினால் நமக்கு நன்றாக இருக்கும் அல்லவா. இதனால் இப்பெயர் சூட்டினார். எனவே கீழ்க்கண்ட பாடலை பாடினால் ஆண்டாள் உங்களை வாழ்த்துவாள். நல்ல காலமும் பிறந்துவிடும்.  

திருவாடிப்பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதுார் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநுாற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே

பொருள்
திருவாடிப்பூரமான இன்று அவதரித்தவள் வாழ்க. திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க. பெரியாழ்வார் பெருமையுடன் வளர்த்தப் பெண் பிள்ளை வாழ்க. ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த ராமானுஜரின் தங்கையானவள் வாழ்க. 143 பாசுரங்களை (நாச்சியார் திருமொழி) பாடியவள் வாழ்க.
உயர்வற உயர்நலம் உடைய அரங்கநாதருக்கு மலர்மாலையை மகிழ்ந்து தான் சூடிக் கொடுத்தவள் வாழ்க. மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க. புதுவை நகரெனும் ஸ்ரீவில்லிபுத்துார் நகர்க் கோதையின் மலர்ப்பதங்கள் வாழ்க வாழ்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !