மஞ்சள் வளத்துடன் வாழ்க! ..அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
2013ம் ஆண்டின் கூட்டுத்தொகை 6. இதற்குரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரனுக்குரிய தலம் ஸ்ரீரங்கம். பெண்கள் தீர்க்கசுமங்கலி வரம் பெற, ஸ்ரீரங்கம் சென்று, ரங்கநாதரையும். ரங்கநாயகி தாயாரையும் வணங்கி வர வேண்டும். அத்துடன் ரங்கநாதருக்குரிய பாசுரங்களையும் பாடுங்கள்.
1. பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!
2. கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுபட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்! ஏழையேன் ஏழையேனே!
3. மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!
4. கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.
5. ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனியையோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
6. வெண்திரைக் கருங்கடல் சிவந்து வேவ, முன் ஒர் நாள்
திண்திறற் சிலைக்கைவாளி விட்டவீரர் சேரும் ஊர்,
எண் திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்த நீர்,
வண்டுஇரைத்த சோலை வேலி, மன்னுசீர் அரங்கமே.
7. சரங்களைத் துரந்து வில் வளைத்து, இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்,
பரந்துபொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன்பணிந்த கோயிலே.
8. இலைத்தலைச் சரந்துரந்து இலங்கை கட்டழித்தவன்
மலைத்தலைப் பிறந்திழிந்து வந்துநுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்தெறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத்தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே.
9. அறிந்தறிந்து வாமனன் அடியிணை வணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்!
மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னுமாலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.