கன்னி: வீட்டில் சுப நிகழ்ச்சி!
புதனை ஆட்சிநாயகனாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே!
சூரியன் 12ம் இடமான சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ஆட்சி நாயகன் புதனும் அவருடன் இருக்க மாதம் பிறக்கிறது. புதன் 12ல் இருப்பதால் எதிரி தொல்லை, முயற்சியில் தோல்வி, உடல் நலத்தில் சிறிது பாதிப்பு என ஜோதிட தத்துவம் கூறுகிறது. சூரியனால் அலைச்சல், சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அதற்காக நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. காரணம் அந்த இரண்டு கிரகங்களும் 7ம் வீட்டை பார்க்கின்றன. அந்த பார்வைக்கு நன்மை தரும் அபார சக்தி உண்டு. சூரியனின் பார்வையால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை உயரும். ஆரோக்கியம் மேம்படும். புதனின் பார்வையால் எடுத்த முயற்சியில் வெற்றி அடையும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர்.புதன் செப்.3ல் உங்கள் ராசிக்கு வருகிறார். இந்த இடத்தில் அவரால் வீட்டில் சில பிரச்னைகள் உருவாகலாம்.சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால், பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா, கேளிக்கை என்று சென்று மகிழ்வீர்கள். இவர் செப்.8ல் இடம்மாறி துலாமிற்கு செல்வதால் பொருளாதார வளம் மேம்படும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். குரு மற்றும் சனியின் பார்வை சாதகமாக அமைந்துள்ளன. சனி மற்றும் ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலனைத் தர மாட்டார்கள். மாறாக நன்மை பெற வாய்ப்பு உண்டு. எனவே நற்பலனை எதிர்பார்க்கலாம். செவ்வாயால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர் நிலை பெறுவர். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் பலன் கிடைக்கும்.
நல்ல நாள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24,25,30,31, செப்.1, 2,3,7,8,11,12
கவன நாள்: ஆகஸ்ட் 26,27
அதிர்ஷ்ட எண்கள்: 7,9 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.