உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி ஐந்தாம் வெள்ளி விழா

முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி ஐந்தாம் வெள்ளி விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி ஐந்தாம் வெள்ளி திருவிழா நடந்தது விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து குளக்கரையிலிருந்து புனிதநீர் மற்றும் பால் குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 10.30 மணிக்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலபூஜைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு விநாயகர் கோவிலிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு மாவி ளக்கு பூஜை நடத்தினர். அம்மனுக்குபொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு இந்திர விமானத்தில் விநாயகர், முருகன், முப்பெரும் தேவியர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !