நெய்யாடியப்பருக்கு நெய் அபிஷேகம்
ADDED :4780 days ago
திருவையாறு அருகேயுள்ளது திரு நெய்த்தானம். இங்கே மூலவரான நெய்யாடியப்பருக்கு நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இளம் சூடு கொண்ட வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நெய் அபிஷேகத்துக்கு பிறகு கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய நெய்யை, இந்த வெந்நீர் உருக்கி கீழே தள்ளிவிடுகிறது. இந்தக் கருவூலத்தை எறும்புகள் எட்டியும் பார்ப்பதில்லையாம்!
கோலார் தங்க வயல் பகுதியில் உள்ளது பங்காரு திருப்பதி, அங்கே மூலவரான ஸ்ரீநிவாசரை சாளரங்கள் வழியாகத்தான் தரிசிக்க முடியும். ஒரு சிறிய மண்டபத்துக்குள் ஸ்ரீநிவாசர், நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். ஆறு சிறு ஜல்லன்கள் அந்த மண்டபத்தைச் சுற்றி அமைந்துள்ளன. காமம், குரோதம் முதலான ஆறு தீக்குணங்களை விடுத்து, இறைவனைத் தரிசித்தால் மோட்சம் கிட்டும் என்பதுதான் இந்த ஆறு ஜன்னல் தரிசனத் தத்துவம்.