உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ குடும்பம்!

சிவ குடும்பம்!

சிவன் ஞானத்தின் அடையாளம் பார்வதி கருணையின் வடிவம் விநாயகர் வெற்றிக்கு அடையாளம் முருகன். ஆற்றலின் வடிவம் இந்த நான்கும் சேர்ந்ததே சிவ குடும்பம்.

பவித்ரம்: கிரியைகள் செய்யும்போது தர்ப்பையை மோதிரம்போல் அணிந்துகொள்வதற்கு பவித்ரம் அணிதல் என்று பெயர். மணம், வாக்கு, காயம் ஆகியவற்றால் வரக்கூடிய பாவங்களிலிருந்து காப்பதற்காக பவித்ரம் அணியப்படுகிறது.

ஆறு நிலைகளில் ஆறுமுகன்: முருகப் பெருமான் குழந்தைகளுக்கு குழந்தை வேலனாகவும், இளைஞர்களுக்கு பாலசுப்ரமணியனாகவும், கலைஞர்களுக்கு சண்முக நாதனாகவும், வீரர்களுக்கு தேவ சேனாதிபதியாகவும், மாணவ நிலையில் மந்திர உபதேசம் பெற விரும்பி வழிபடுவோர்க்கு சுவாமிநாதனாகவும், இல்லறத்தார்க்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியராகவும், துறவற நிலையினருக்கு பழனி ஆண்டவராகவும் அருள்பாலிக்கிறார்.

சரவணபவ: சரவணபவ என்ற முருக மந்திரத்தில் ..
ச லட்சுமியின் அருளையும்
ர-கலைமகளின் அருளையும்
வ- முக்திப் பேறையும்
ண- பகை நீங்கிய வெற்றியையும்
ப- எம பயம் நீங்குவதையும்
வ- நோயற்ற வாழ்வையும் குறிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !