சிவபக்த ஆஞ்சநேயர்
ADDED :4769 days ago
எல்லா கோயில்களிலும் ராம பக்த ஆஞ்சநேயர் தான் ராம நாமம் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் மயிலாடுதுறை அருகில் திருக்குரச்சூர் என்ற தலத்திலுள்ள ஆஞ்சநேயர் சிவனை பூஜித்தபடி சிவநாமம் சொல்லிக் கொண்டு அருள் செய்கிறார். சித்திரை, வைகாசி மாதங்களில் ஒருநாள் குரங்குகளே வந்து சிவனை பூஜை செய்வதை இன்றும் காணலாம்.