சிறந்த பிரார்த்தனை!
ADDED :4769 days ago
காலில் அடிப்பட்ட நரி ஒன்று இரைதேட முடியாமல் தவித்தது. அப்போது புலி ஒன்று தான் அடித்த மானைத் தின்றுவிட்டு மீதத்தை நரியிடம் போட்டுவிட்டுச் சென்றது. அனைத்தையும் ஒரு துறவியும் அவரது சீடனும் பார்த்தார்கள். சீடன் சொன்னான் குருவே நமக்கு என்ன வேண்டுமோ அதை இறைவனே கிடைக்கச் செய்வார் என்பது இந்த சம்பவத்தால் எனக்குப் புரிகிறது! எனவே நான் இனி எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து எனக்கு அருளும்படி இறைவனை வேண்டப்போகிறேன்! அவன் சொன்னதை அமைதியாகக் கேட்ட துறவி சொன்னார் மகனே, நீ பார்க்க வேண்டியது நரியை அல்ல. புலியை. பிறருக்கு உதவுவதற்காகவே கடவுள் உன்னைப் படைத்திருக்கிறார். அதைச் செய்திட கடவுளை அருளும்படி கேள்... அதுதான் சிறந்த பிரார்த்தனை!