ஸ்ரீரங்கம் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் நம்பெருமாள்!
ADDED :4307 days ago
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து ஒன்பதாம் நாள் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் முத்தங்கி மற்றும் முத்துக்கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். கோவிலில் வைகுண்ட ஏகதசி முன்னிட்டு வரும் பக்தர்களை கண்காணிப்பதற்காக ஸ்ரீரங்கம் பஸ்ஸ்டாப் அருகே கண்காணிப்பு கோபுரம் போடப்பட்டுள்ளது. மார்கழி பாவை நோன்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள் சன்னதியில் 25ம் பாசுரத்தின் படி, ஒருத்தி மகனாய்ப் பிறந்து (ஒளித்து வளர்ந்த ஒருவன்) காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.