உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் கண்கள்...

ஆயிரம் கண்கள்...

வேத தெய்வங்களுள் பழைமைவாய்ந்தவன் வருணன். மித்ரன் என்றும் இவனுக்குப் பெயருண்டு. பிற்காலத்தில் இந்திரனும் பிரஜாபதியும் இவனுடைய பெருமையைப் பங்கிட்டுக் கொண்டனர். பிரபஞ்சம் முழுவதையும் ஒருசேர பார்த்துப் பரிபாலிக்க ஆயிரம் கண்களைக் கொண்டவன் வருணன். மழைக்கும் மேற்கு திசைக்கும் அதிபதி. நான்கு கரங்களில் பாம்பு, பாசக்கயிறு, தாமரை, சங்கு ஆகியவற்றை ஏந்தி நிற்பவன். அழகிய குடையுடன் கூடிய ஏழு அன்னங்களால் இழுத்துச்செல்லப்படும் ரதத்தில் பயணிப்பவன். முதலைமேல் அமர்ந்திருக்கும் கோலத்திலும் வருணனை உருவகப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !