உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்!

மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்!

மதுரை:  மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்புடன் நடைபெற்றது.  விழாவினையொட்டி, 108 கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதியின் திருவிக்ரஹங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம், இளநீர், பழரசங்கள் உள்ளிட்ட அபிஷேகங்களும், பிறகு வண்ண மலர்களால் அபிஷேகமும் நடந்தன. ஸ்ரீராதா மதுராபதியின் திருவிக்ரஹங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு அலங்காரக் குழுவால் செய்யப்பட்ட புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.a


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !