உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்டா பூவின் மாநாடா!

அட்டா பூவின் மாநாடா!

ஓணம் பண்டிகையில் இடம்பெறும் பூக்கோலம் கேரளாவில்பிரசித்தம். பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மாநாடு போட்டது போல வாசல் தோறும் கோலம் இடம்பெற்றிருக்கும். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகிய பூக்களால் கோலத்தைஅலங்கரிப்பர். மகாபலி மன்னரை வரவேற்கும் விதத்தில் வாசலில் பூக்கோலம் இடம் பெறுகிறது. நறுமணம் கமழும் பூக்களைப் போல உள்ளத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே இக்கோலத்தின் நோக்கம். மனதைக் கவரும் இக்கோலங்கள் கேரளத்தின் கலைநயத்தை பறைசாற்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !