பசு தரும் பலன்!
காளிதாஸர் எழுதிய ரகு வம்ச காவியத்தில் திலீபன் மகாராஜா, காமதேனுவின் மகளான நந்தினியை முறையாக மூன்று முறை வலம் வந்து வாரிசு பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. பசுவைக் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தினாலே நமது பாவங்கள் அனைத்தும் கழிந்துவிடுகின்றன. பசுவை முறையாகப் பராமரிப்பதால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய பலன் கிடைக்கிறது. காயப்பட்டிருக்கும் பசுவுக்கு மருத்துவம் அளித்தால் நமக்கு வரும் நோய், நொடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். குளிர், வெயிலில் இருந்து அதற்கு அடைக்கலம் தந்து காத்தால் நமக்கு நிச்சயம் சொர்க்கம் கிட்டும். பசுவை பூஜை செய்வதால் நமக்கு சகல விதமான சவுபாக்யமும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பசுவின் கோமிய நீரை வீடு உள்ளேயும் வெளியேயும் தெளித்தால் தொற்று நோய்களுக்கு நோ சான்ஸ். பசுஞ்சாணம் தெளித்து வீட்டு வாசலில் கோலமிட லக்ஷ்மியின் அருள் கிட்டும். விஷ ஜந்துக்களும் வீட்டினுள் நுழையாது. பசுவிற்கு உப்பு கொடுத்தால் நமக்கு எல்லா வித வளமும், நலமும் உண்டாகும் என்றும் விஷ்ணோ பாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது.