உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆணாக அம்பிகை.. பெண்ணாக ஈசன்!

ஆணாக அம்பிகை.. பெண்ணாக ஈசன்!

கஞ்சன்மலை வில்வநாதீஸ்வரர் கோயிலில் சித்திரை பவுர்ணமி நாளில் இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வடக்கு பக்கத்தில் முதலில் 3 அடி உயரத்திற்கு ஜோதி தெரிகிறது. பிறகு சிறிது சிறிதாக அது 6 அடி, 9 அடி, 12 அடி என்று 18 அடி உயரம் வரை அகன்று விரிந்து பின்மறைந்து விடுகிறது. இந்த அதிசய ஜோதியை அன்று பக்தர்கள் தரிசித்தால் வாழ்வில் எல்லா நலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை! திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பஞ்ச பிராகார விழாவில் இறைவன் ஜம்புகேஸ்வரர் அம்பிகையாக பெண் வேடத்திலும், அகிலாண்டேஸ்வரி ஆண் வேடத்திலும் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். இதுபோன்ற திருக்கோலத்தில் இறைவனும் இறைவியும் தோன்றுவது அபூர்வமாகக் கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !