தினமும் திருக்கல்யாணம்!
ADDED :4444 days ago
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தலம், கார்க்கோடகநல்லூர். இங்குள்ள சிவன்கோயிலில் நந்தியம் பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நந்தியிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு திருமணபாக்கியம், விரும்பிய வேலை, உயர் கல்வி வாய்ப்பு கிட்டுகிறதாம். பின்னர் இங்கு மணிகட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான மணிகளை கோயிலில் காணமுடிகிறது.