பெருமாள் கோயிலில் பூமிக்கு அடியிலிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்பு!
ADDED :3548 days ago
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் மாதவபெருமாள் கோயில் அருகே பூமிக்கு அடியிலிருந்த ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கபட்டது. திருவெற்றியூர் மாதவ பெருமாள் கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. கோயில் திருப்பணிக்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டபட்டது. அப்போது ஒன்றரை அடி நீள மாதவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கபட்டன. உற்சவ மூர்த்திகளான இச்சிலைகள், விழா காலங்களில் பல்லக்கில் வீதி உலா எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிந்துள்ளது. ஐம்பொன் சிலைகளை தாசில்தார் ராஜேஸ்வரி, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டனர். சிலைகள் தாலுகா அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.