உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமசாமி கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு

ராமசாமி கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு

பொங்கலூர்: பொங்கலூர், கோவில்பாளையம் ராமசாமி கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வழிபாடு இன்று நடைபெறுகிறது.கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கவும், பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று சாமி தரிசனம் செய்யவும், சவுக்கு கம்புகளால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, பார்க்கிங் வசதி, பல்லடம் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து, விழாப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.இதற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. இன்று நடக்கும் திருவிழாவில், பக்தர்கள் உடலில் சேறு பூசி தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !