சதுர்வேதமங்கலம் கோயிலில் மாசித்திருவிழா தொடங்கியது
சிங்கம்புணரி எஸ்.வி.மங்கலம் ஆத்மநாயகி அம்மன் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டப்பட்டது. குன்றக்குடி ஆதினத்திற்கு உட்பட்ட ஐந்து கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 10 நாள் நடைபெறும். நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு காப்பு கட்டப்பட்டது. உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை உமாபதி சிவாச்சாரியார் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள், கிராமத்தார்கள், மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர். மாலை 4 மணிக்கு அரளிப்பாறைக்கு தண்டாயுதபாணி சுவாமி புறப்பாடு நடந்தது. 5ம் திருவிழாவான மார்ச் 6ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், 6ம் திருவிழாவான 7ம் தேதி இரவு கழுவன் திருவிழா, 9ம் திரு விழாவான 10ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 10ம் திருவிழாவான 11ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. அன்றைய தினம் அரளிப்பாறையில் ஐந்துநிலை நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.