உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றம்

திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி பிரம்மோற்சவ விழாவில், நேற்று, கொடியேற்றம், உற்சவர் கேடயவாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம், விநாயகர் வீதியுலாவுடன் மாசி மாத பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று, காலை, 5:30 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவம் கொடியேற்றப்பட்டது. அப்போது, உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கேடய வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், திருத்தணி முருகன் திருவடி சபை சார்பில், பரத நாட்டியம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இன்று, காலை, 9:30 மணிக்கு, வெள்ளி சூர்ய பிரபை, இரவு, 7:30 மணிக்கு பூத வாகனத்திலும் உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !