நாமக்கல் முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
ADDED :2928 days ago
நாமக்கல்: ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாசிக்கு நேற்று காலை தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. முன்னதாக சிறப்பு கணபதி யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமி வெள்ளி கவசத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், கடைவீதியில் உள்ள சக்தி வினாயகர் கோவிலில் உள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கிருத்திகை விரதமிருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர்.