உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் பண்டிகை கோவையில் கோலாகலம்

கிறிஸ்துமஸ் பண்டிகை கோவையில் கோலாகலம்

கோவை:கிறிஸ்துமஸ் பண்டிகை கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். கோவையிலும் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் புத்தாடை உடுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். கோவை திருச்சி ரோடு, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கிறிஸ்துநாதர் சர்ச்சில் காலை, 4:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. உப்பிலிபாளையம் அவிநாசி ரோடு இமானுவேல் சர்ச், காந்திபுரம் கிறிஸ்துநாதர் சர்ச், ராமநாதபுரம், புனித ஸ்டீபன் சர்ச், என்.ஜி.ஜி.ஓ., காலனி கிறிஸ்துநாதர் சர்ச், மதுக்கரை கிறிஸ்துநாதர் சர்ச் ஆகியவற்றில் காலை, 4:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. மேலும் கோவை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சர்ச்களில் சிறப்பு ஆராதனை நடந்தது. பெரியகடை வீதியில் உள்ள புனித மைக்கெல் ஆதிதுாதர் பேராலயத்தில், பேராயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், நள்ளிரவு ஆராதனை நடந்தது. இதில் பெரும் திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !