உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பத்ரகாளியம்மன் கோயிலில், ஆயிரம் பேர் பூக்குழி இறங்கி வழிபாடு

பழநி பத்ரகாளியம்மன் கோயிலில், ஆயிரம் பேர் பூக்குழி இறங்கி வழிபாடு

பழநி: பழநி அருகே பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில், வைகாசி திருவிழாவில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்.

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பெரியகலையம்புத்தூர் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே., 28ல்) சண்முகா நதியில் இருந்து  தீர்த்த குடங்கள் எடுத்து பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று (மே., 29ல்) அதிகாலை யில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.  

மாவிளக்கு, அக்னி சட்டி, பால்குடங்கள் எடுத்தும், கிடாவெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.  பொங்கல், புளியோதரை அன்னதானம் வழங்கப்பட்டது.  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !