நல்லவர்களின் குணம்
UPDATED : ஆக 17, 2022 | ADDED : ஆக 17, 2022
* நல்ல மரம் நல்ல கனிகளை தரும். அதுபோல் நல்லவர்கள் பிறருக்கு நன்மையே செய்வர். * தீமையை நன்மையால் வெற்றி கொள்ளுங்கள். * மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. * யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். * ஒருவரின் ஞானமே அவருடைய முகத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது.* நேர்மையாளரின் பாதை ஒளி போன்றது. * அநியாயத்தின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானத்தைவிட, நியாயமாக சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.* ஒன்றின் துவக்கத்தைவிட அதன் முடிவு சிறந்தது. - பொன்மொழிகள்