உள்ளூர் செய்திகள்

கடவுளுக்கு கடன் கொடுப்பவர்

* ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் கடவுளுக்கு கடன் கொடுப்பவராக மாறுகிறார்.* இளைஞரே! நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது.* தந்தையை கொடுமைப் படுத்தி தாயைத் துரத்தி விடும் மகன், வெட்கக் கேட்டையும், பெரும் பாவத்தையும்சேர்க்கிறான். * மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு தீங்கு வராதபடி காத்துக் கொள்ளுங்கள், குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியதாகும்.* நீ இளவயது இச்சைகளை விட்டு ஓடிவிடு. துாய்மையான உள்ளத்தோடு கடவுளின் பெயரை சொல்லி வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை தேடு.* நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றி தம்பட்டம் அடிக்காதீர்கள். * உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால், அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் விருந்தினர் போல உங்களோடு வாழட்டும்.