அன்பு செய்யுங்கள்
* தலைக்கனத்தினால் அறிவு குறையும். அன்பு செய்யுங்கள் நன்மை அதிகரிக்கும்.* சோதனையை சகித்துக்கொள்ளுபவர் முடிவில் கிரீடத்தைப் பெறுவார்.* எறும்பின் உழைப்பைக் கவனியுங்கள். அதற்கு தலைவன் கிடையாது. * கருணையும் சத்தியமும் ஒருவரிடம் இருக்குமேயானால் அவரிடம் எல்லாம் மண்டியிடும். * முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல் சிறந்தது.* கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.* புருஷனை தவிர கற்புள்ள பெண் வேறு எதையும் அறியாதவள்.* உரக்கப்பேசுங்கள். கோபப்படுவதில் தாமதமாக இருங்கள்.* மனக்குழப்பம் தீர அமைதியாக இருங்கள்.* ஒருவருக்கு உதவியாக கொடுக்கப்படும் பணம் அவரது பாவம் போக்கும்.* வெற்று வார்த்தை பேசுபவர்களிடம் கவனம் செலுத்தாதீர். * யாரையும் ஏமாற்ற வேண்டாம். யாரிடமும் ஏமாற வேண்டாம். * ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருங்கள். * எந்த செயலையும் முனைப்போடு செய்தால் வெற்றி உறுதி. -பொன்மொழிகள்