உள்ளூர் செய்திகள்

பொறுமை பலம் மிக்கது

* பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும். * பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு அனைத்தையும் மன்னிக்கும்.* பேசுபவர்கள் செயலாற்ற முடியாது. குறைந்த சொற்கள் அதிக லாபம் தரும்.* தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவதே மேல்.* கர்வத்தால் அறிவு வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும். * கடவுளின் கருணையை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது.* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. * முட்டாளின் பாட்டை விட அறிவாளியின் நிந்தனை சிறந்தது.* கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.* தேனாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் திகட்டி விடும்.* இனிய சொற்கள் மனதிற்கும், உடம்புக்கும் நலம் தரும்.* நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறக்காதீர்கள்.* தர்மம் செய்வதை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். * உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள். சபிக்க வேண்டாம்.