உடல்நலம் பேணுங்கள்
UPDATED : ஏப் 24, 2020 | ADDED : ஏப் 24, 2020
* உடலுக்கு ஊறு வராதபடி நலமுடன் காத்துக் கொள்ளுங்கள். * நல்ல பிள்ளைகள் தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.* பெற்றோருக்கு கொடுமை செய்பவன் கேட்டை வருவிக்கிறான்.* தந்தையின் போதனைக்கு செவி சாய்த்து கவனம் செலுத்துங்கள்.* இளமை நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள்.* இளமையில் பொறுப்புகளைச் சுமப்பது மனிதருக்கு நலமானது.* நீங்கள் மேற்கொள்ளும் நற்செயல்கள் நிறைவேற ஆண்டவர் ஆசியளிக்கிறார். * உழைப்பது எதுவும் வீண்போகாது என்பதை உணர்ந்து நற்செயல்களில் இன்னும் அதிகமாக ஈடுபடுங்கள்.* கடமையில் கவனம் செலுத்தி கைகளால் உழைத்து அமைதியாக வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.* உண்பதும், குடிப்பதும் மட்டும் வாழ்வாகாது. நீதி, அமைதி, மகிழ்ச்சி என்னும் நற்பண்புகளைக் கொண்டது. பொன்மொழிகள்