முயற்சியில் வெற்றி பெற...
UPDATED : ஆக 17, 2022 | ADDED : ஆக 17, 2022
* உண்மையை கடைப்பிடித்தால் முயற்சியில் வெற்றி பெறலாம். * உங்களுக்கு பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதீர். * தேவைக்கு மேல் உள்ளதை எல்லாம் தர்மம் செய்து விடுங்கள். * வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைபிடியுங்கள்.* முகம் கோணாமல் தர்மம் செய்யுங்கள். * நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விடமாட்டான். * பொல்லாத நாக்கு உள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை. * பிறருக்கு நன்மை செய்வதில் சோர்வுற வேண்டாம். * தீமையைச் செய்து துன்புறுவதைவிட, நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.* பிறரது குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்களது குற்றங்களும் மன்னிக்கப்படும். * மனமகிழ்ச்சி முக மலர்ச்சியைத்தரும். -பொன்மொழிகள்