யார் அறிவாளி
UPDATED : ஜூன் 30, 2020 | ADDED : ஜூன் 30, 2020
* அமைதி குணத்தோடு செயலில் வெற்றி பெறுபவனே அறிவாளி.* விரைவில் செல்வந்தனாக முனைபவன் வெகுளியல்ல.* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுவான்.* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.* வாயடக்கமாயிரு; உதடுகளை அதிகம் திறக்காதே.* உத்தமனாக இருக்க விரும்பினால் ஏழைகளுக்கு கொடு.* உண்மைக்கு எதிராக புளுக வேண்டாம். கசப்பான பொறாமை, சச்சரவும் வேண்டாம்.* மதி இழந்தவனுக்கு திருடிக் குடிக்கும் தண்ணீரும் தித்திக்கும்.* இறுமாப்பில் இருந்து இருதயத்தையும், மமதையில் இருந்து கண்களையும் தள்ளி வை.- பொன்மொழிகள்