நாத்திகரை மாற்றியவர்
சீனநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், நாத்திக குடும்பத்தில் பிறந்தவர். ஒருமுறை பீட்டர்ஸ்பர்க் நகரில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த ரயிலின் விளம்பரப் பலகையில், 'தேவன் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்று எழுதியிருந்ததைக் கண்டார். இந்த வாசகம், அவரது மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.'ஆம்... நம் பிரச்னைகளை இறக்கி வைக்க ஒரு வடிகால் வேண்டும். அப்படி இறக்கி வைக்கப்படும் இடம் தேவனிடமாகத் தான் இருக்க வேண்டும், அவர் மட்டுமே நமக்கு வேண்டிய நன்மையைத் தருவார். வாசகத்தின் ஒவ்வொரு எழுத்தும் உண்மையானதே. நாத்திகம் மனிதனுக்கு ஒத்துவராது' என்பதை உணர்ந்தார். அன்றுமுதல் தேவனிடம் தம் பிரச்னைகளைச் சொல்லி ஜெபிக்க ஆரம்பித்தார். மனபாரம் குறைந்தது. வாழ்வில் நம்பிக்கை பிறந்தது. நாத்திகர்களுக்கே அருள் செய்யும் தேவன், ஆஸ்திகர்கள் மனம் விட்டு ஜெபித்தால் எவ்வளவு நன்மைகளைத் தருவார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.