உள்ளூர் செய்திகள்

அன்பின் அளவுகோல்

பில்லிகிரஹாம் என்ற அறிஞர் சொல்கிறார்.''உங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக நீங்கள் கண்ணீர் விடுவீர்களேயானால் அதுவே உங்களுடைய பலவீனம். ஆனால், மற்றவர்கள் மீது அன்பு கூர்ந்து அவர்களுக்காக கண்ணீர் விடுவீர்களேயானால் அது உங்களுடைய பலம். மற்றவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பைக் கொண்டே, ஆண்டவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை அளவீடு செய்ய முடியும்,'' என்று.ஆம்... இயேசுகிறிஸ்து மற்றவர்கள் மீது அன்பு கூர்ந்தார். பிறருக்காக ரத்தம் சிந்தினார். அதைப் போல நம் சக மக்களுக்காக உயிரையும் கொடுக்கும் தியாக உள்ளத்தைப் பெறுவதே நிஜமான அன்பாகும். அத்தகைய உள்ளம் கொண்டவரே உண்மையான பக்தி கொண்டவர்.