நேரத்தின் மதிப்பு
UPDATED : அக் 29, 2024 | ADDED : அக் 29, 2024
ரயில் பெட்டியை உருவாக்கியவர் புரூனல். அவருடைய அறையில் ஒரு நாற்காலி மட்டும் தான் இருக்கும். அதில் அமர்ந்து பணிகளை கவனிப்பார். அவரை சந்திக்க வருபவர்களை நிற்க வைத்து பேசுவார். முக்கியமானவர்கள் யாராவது வந்தால் அவர்களை உட்காரச் செய்து தான் நின்று கொள்வார். இது பற்றி கேட்ட போது, 'யாருடைய நேரமும் வீணாவதை நான் விரும்பவில்லை' என்றார்.