அலட்சியமா...
UPDATED : அக் 29, 2024 | ADDED : அக் 29, 2024
படுத்திருந்த சிங்கத்திடம், ' நீ பலசாலி என நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அது தவறு. உன் பலம் எப்படிப்பட்டது?' என எனக்குத் தெரியும் என்றது கொசு. அதைக்கேட்ட சிங்கம், நறநற என பல்லை கடித்தது. கொசு அதன் மூக்கின் மேலும், தாடையிலும் கடிக்கத் தொடங்கியது.கொசுவை விரட்ட தன் நகங்களால் முகத்தை சிங்கம் பிறாண்ட ரத்தம் வந்தது. சிங்கத்தை வென்றதாக கருதிய கொசு அலட்சியத்துடன் பறந்தது. சற்று நேரத்தில் சிலந்தி வலை ஒன்றில் சிக்கியது. வலிமையான சிங்கத்தை வெற்றி கொண்ட நான் எதிர்பாராதவிதமாக சிலந்தி வலையில் சிக்கி உயிர் விடப் போகிறேனே... என வருந்தியது.