இளமையின் ரகசியம்
UPDATED : பிப் 28, 2025 | ADDED : பிப் 28, 2025
அந்த காலத்தில் மனிதர்கள் நுாறாண்டு வாழ்ந்தனர். இப்போது நடுத்தர வயதிலேயே நோயால் இறக்கிறார்களே அது ஏன். கடலின் நடுவில் சிறு தீவுகளில் வாழ்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அத்துடன் இளமை, உற்சாகத்துடன் வாழ்நாளை கழிக்கிறார்கள். அதற்கு அவர்களின் நல்ல பழக்கங்களே காரணம். * பசி வந்த பின்னர் சாப்பிடுவர். அதுவும் முக்கால் வயிறு மட்டுமே. * தீவில் என்ன கிடைக்குமோ அது மட்டுமே அவர்களுக்கான உணவு. * தேவையான தானியம், கிழங்கு வகைகளை தாங்களே பயிரிடுவர். * தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை அவர்களே தீர்க்கிறார்கள். மற்றவர் தலையிட அனுமதிப்பதில்லை. * இயற்கையை நேசிக்கவும், பிற உயிர்களின் மீது அன்பு காட்டவும் மறப்பதில்லை.