பரிசு
UPDATED : ஏப் 17, 2025 | ADDED : ஏப் 17, 2025
கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த ஓவியம் பலரையும் கவர்ந்தது. அதில் சிறுமி, நடுத்தர வயது பெண், மூதாட்டி என மூவர் இடம் பெற்றிருந்தனர். அதற்கு விளக்கம் தருபவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அங்கு இருந்த முதியவர் ஒருவர் இது பற்றி, 'ஓவியத்தில் உள்ள சிறுமி - எதிர்காலம், நடுத்தர வயது பெண் - நிகழ்காலம், மூதாட்டி - கடந்த காலத்தை குறிக்கும். கடந்த கால தவறுகளை தவிர்த்து நிகழ்காலத்தில் மனிதன் வாழ்ந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை இது உணர்த்துகிறது' என்றார். அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.