உள்ளூர் செய்திகள்

வெள்ளை மனம்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் டேவிட். ஒரு ஞாயிறன்று அவனது அம்மா தேங்காய் வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பினார். செல்லும் வழியில் தேங்காயைப் பற்றி சிந்தித்தபடி சென்றான். தென்னை மரம் உயரமாக இருக்கிறதே... இதன் காய் மட்டும் நாருடன் மட்டைக்குள் இருக்கிறதே... அதை சாப்பிடுவதால் என்ன நன்மை என பல சந்தேகங்கள் உண்டானது. தேங்காயை வாங்கி வந்து கொடுத்தான். அப்பாவிடம் இது பற்றி கேட்ட போது விளக்கமாக சொன்னார். கடைசியாக 'வெள்ளை மனம் கொண்டவர்கள் தென்னை போல உயர்வாக வாழ்வர்' என்றார் அப்பா.