உள்ளூர் செய்திகள்

மணியோசை

வாழ்க்கை பாடத்தை ஒரு வரியில் சொல்லுங்கள் தாத்தா எனக் கேட்டான் சிறுவன். அதற்கு தாத்தா, ''ஆலய மணியை பார். அதனிடம் இருந்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ளலாம்'' என்றார். புரியவில்லையே... என்றான் சிறுவன். 'மெல்ல அடித்தால் அளவாகவும், வேகமாக அடித்தால் சத்தமாகவும், அடிக்காவிட்டால் அமைதியாகவும் கேட்கும். அதுபோல செய்யும் செயலுக்கான விளைவு உன் முயற்சியை பொறுத்தே அமையும்'' என்றார் அப்போது மணியோசை கேட்டது.இருவரும் ஆண்டவரின் அருளை எண்ணி மகிழ்ந்தனர்.